×

அரசுப்பணி மற்றும் நிவாரண நிதி வழங்கிய முதல்வர் ; கனிமொழி எம்,பி.க்கு இது தெரியாதா?..

 

2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடிய போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த போது, அவர்களின் குடும்பத்தினரின் தகுதிக்கேற்ப அரசு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே வழங்கிவிட்டார். 

இறந்தவர்கள் மட்டுமின்றி, கலவரத்தின் போது படுகாயமடைந்த குடும்பத்தினருக்கும் அரசு வேலை என மொத்தம் 19 பேருக்கு அரசுப்பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, சத்துணவு திட்டம் மற்றும் பேரிடர் துறை என பல துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதை கூட தெரியாம திமுக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ‘ உயிரிழந்த குடும்பத்திற்கான அரசு பணி குறித்து இன்றாவது தூத்துக்குடி செல்லும் முதல்வர் உத்தரவிடுவாரா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

இறந்துபோனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதோடு மட்டுமில்லாமால், அவர்களுக்கு ரூ.20 லட்சமும், படுகாயமைடந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி செய்தார். 

இது தெரியாமல் திமுக எம்.பி.கனிமொழி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி செல்லவுள்ள நிலையில்,  ஓட்டு அரசியலுக்காக தவறான தகவலை டிவிட்டரில் பரப்பி வருவது அவரின் அறியாமையையே காட்டுகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News