Connect with us
Vijay

Cinema News

Thalapathy 69: விஜயுடன் இணைந்த ‘சூப்பர்ஸ்டார்’ நடிகர்… வேற லெவல் போங்க!

Thalapathy 69: ரசிகர்களால் செல்லமாக தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

அனிருத் இணையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்தில், இன்னொரு நாயகியாக நடித்திட சமந்தாவை படக்குழு அணுகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இப்படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த இயக்குனருடன் எஸ்.கே?!.. ஃபிளாப் கொடுத்தும் திருந்தலயே!. நல்லாதானே ‘போகுது!..

இந்த விஷயத்தை அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். அதில், ‘விஜய் மிகவும் நல்ல நடிகர். தளபதி 69 படத்தில் நடிக்க கூப்பிட்டு இருக்கின்றனர். என்னுடைய கதாபாத்திரத்தை படத்தில் எப்படி கொண்டு வரப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். விஜய் சினிமாவில் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,’ என்றார்.

ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் வரும் காட்சிகள் திரையரங்கில் ரசிகர்களை அதிர வைத்தன. குறிப்பாக கிளைமேக்ஸ் முன்பு வரும் காட்சி செம கூஸ்பம்ப்ஸ். படம் கன்னடத்தில் நல்ல வசூலினை பெறுவதற்கு சிவராஜ்குமாரின் நடிப்பும் முக்கிய காரணம். இதனால் தளபதி 69 படத்திலும் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sivrajkumar

#image_title

அரசியல் கதையாக உருவாகி வரும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபரில் படம் திரைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தீபாவளி செண்டிமெண்ட் விஜய்க்கு அதிகம் என்பதால் படம் தீபாவ்ளி தினத்தில் திரையில் வெளியானாலும் ஆச்சரியமில்லை.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top