Connect with us
kanna

Cinema News

மனுஷன் திருக்குறளையும் விட்டு வைக்கல!. எட்டு திருக்குறளை ஒரே பாடலில் வைத்த கண்ணதாசன்!..

கலை ஆளுமையாக வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் யாரோடும் ஒப்பிட முடியாத ஒப்பற்ற கவிதையாளர். சிறுகதை, நாவல், புதினம், கட்டுரை, என அனைத்து துறைகளிலும் கால்பதித்து தன் சுவடுகளை விட்டுச் சென்றுள்ளார். சினிமாவில் இவர் இரு சகாப்தத்தையே ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

kanna2

kannadhasan

பெரும்பாலான பாடல்கள் இவரின் வாழ்க்கை அனுபவத்திலேயே வெளிவந்தவையாக இருக்கும். தாலாட்டுப் பாடல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். இவரின் அற்புதப்படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆண்டவன் கட்டளை படத்தில் அமைந்த ‘ஆறு மனமே ஆறு’ என்ற பாடலாகும். இந்த பாடலில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் தமிழின் பெருமையாக கருதப்படும் திருக்குறளில் உள்ள ஒரு எட்டு குறளை இந்த பாடல் மூலம் சேர்த்து எழுதியுள்ளார்.

kanna1

sivaji

இதையும் படிங்க : “என்ன நடந்தாலும் இதை மட்டும் பண்ணிடாதீங்க”… தனது பிள்ளைகளிடம் சத்தியம் வாங்கிய சூப்பர் ஸ்டார்… என்னவா இருக்கும்??

1.தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச்சுடும்
*ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி….*

2 .இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.
*இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…*

3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால் தான்கண் டனைத்து இவ்வுலகு.
*உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும்*.

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது.
*நிலைத் திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.*

5. அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் இழுக்காறு இயன்றது அறம்.
*ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.*

kanna3

sivaji

6அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.

7. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை சேய்நன்றி கொன்ற மகற்கு

8. கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு.

*அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..*

இவ்வாறு இந்த எட்டுக் குறளினால் வரும் பொருளை பாடல் மூலம் சேர்த்து பாடலை பெருமைப்படுத்தியிருக்கிறார். அந்த பாடலும் எந்த அளவுக்கு ஹிட் ஆனது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top