×

கவனத்தை ஈர்க்கும் வரலக்ஷ்மியின் "கண்ணாமூச்சி" பட ஃபர்ஸ்ட் லுக்!

"கண்ணாமூச்சி" பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

 
தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இன்று மக்கள் செல்வியாக உயர்ந்திருக்கிறார். படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார். அந்தவகையில் பெண்களுக்காக ஷேவ் ஷக்தி என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள வரலக்ஷ்மி "கண்ணாமூச்சி" என்கிற படத்தை இயக்கி அவரே நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இன்று இப்படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வரலட்சுமியின் இந்த புதிய முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News