கண்ணன் ரவியின் அடுத்த படம்... ஹீரோ யார் தெரியுமா!

 
gautham

நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு செங்குலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 இப்படத்தை அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார்.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டரில் ரத்தம் படிந்த வேல்கம்பு, சிவப்பு நிறத் துணி மற்றும் உடைந்த வளையல் துண்டுகள் என அமைந்துள்ளது.

பின்னர் கிளிம்ப்ஸ் வீடியோவில் மண்ணில் வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற வளையலை நோக்கி ரத்தத்துடன் வேல்கம்பு பாய்ந்து வந்து அதை உடைப்பது போல உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் செங்குலம் திரைப்படம் 2027ஆம் ஆண்டு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

பத்து தல, மிஸ்டர் எக்ஸ் என தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த கௌதம் ராம் கார்த்திக்கு செங்குலம் படமாவது கைக்கொடுக்குமா காத்திருந்து பார்கலாம்.

CR  Desk
CR Desk

7916 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web