காந்தாரா படத்தின் அடுத்த பாகம் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா?.. சூப்பர் பர்த்டே கிஃப்ட்!..

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த காந்தாரா திரைப்படம் 2022ம் ஆண்டு பான் இந்தியா படமாக வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. அதை தொடர்ந்து சுமார் மூன்று ஆண்டுகால உழைப்பிற்கு பிறகு இன்று ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸ் தேதியை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
கன்னட படமான உலிதவரு கண்டந்தேவில் முக்கிய பாத்திரத்தில் அறிமுகமானார் ரிஷப் ஷெட்டி. அதை தொடர்ந்து கிரிக் பார்ட்டி, சர்க்காரி ஹி பிரா. ஷாலே போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும், பெல் பாட்டம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் அவர் இயக்கி நடித்த காந்தாரா படம் உலகளவில் 400 கோடிக்கு மேல் வசூலித்து, கன்னட திரையுலகில் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக பாராட்டு பெற்றது.

இந்நிலையில் இன்று ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தாரா: சாப்டர் 1 திரைப்படம் 2025 அக்டோபர் 2 அன்று தசரா பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.
மேலும், காந்தாரா 2 படத்தில் காந்தாரா முதல் பாகத்தின் முந்தைய கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, இப்படமும் கொங்கன் நாட்டுப்புற வாழ்வியல் மற்றும் பண்பாட்டை உண்மையாக சித்தரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ரிஷப் ஷெட்டி சத்ரபதி சிவாஜி மகாராஜ், ஜெய் ஹனுமான் மற்றும் அஸ்வின் கங்கராஜூ இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.