×

ஐபிஎல் மட்டும் விளையாடினால் இப்படி மோசமான ஃபார்மில்தான் இருப்பார் – தோனி குறித்து கபில்தேவ் கருத்து!

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக தோல்வியை தழுவி பிளே ஆஃப்க்கு செல்லாமல் வெளியேறியுள்ளது.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக தோல்வியை தழுவி பிளே ஆஃப்க்கு செல்லாமல் வெளியேறியுள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டதை தோனி எந்த உள்நாட்டு தொடரிலும் விளையாடாமல் நேரடியாக  ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதனால் அவரின் பேட்டிங்கைப் பார்க்கக் காத்திருந்தனர் கோடிக்கணக்கான ரசிகர்கள். ஆனால் தோனியால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் கோட்டை விட்டார்.  14 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரே ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன் எனக் கூறியுள்ளார்.

தோனியின் ஆட்டத்திறன் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் ‘ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடினால் தோனியால் சிறப்பாக விளையாட முடியாது. அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என நினைத்தால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News