ஓடிடிக்கு வந்த கரா… தேர்தல் கொடுத்த ஷாக்… இதுவாவது கைக்கொடுக்குமா?

கரா படம் இன்று ஓடிடிக்கு வந்திருக்கும் நிலையில் படத்தின் விமர்சனம்
 
karaa

தனுஷ் நடிப்பில் கரா படம் பல தடைகளை தாண்டி திரையரங்கில் வெளியாகி பிளாப் ஆகி விட்டது. இதனை தொடர்ந்து படம் தற்போது ஓடிடிக்கு வந்து இருக்கிறது. 

பொதுவாகவே தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய வெற்றியை பெறும். விமர்சன ரீதியாக படம் மாஸ் ஹிட் அடிக்கும். ஆனால் தனுஷ் நடிப்பில் ஒரு படம் வெளிவந்தது கூட தெரியாமல் போனது இந்த முறைதான். திரையரங்குகளில் வசூலில் பெரிய அடி வாங்கியது. 

ஆனாலும் கூட இப்படத்தினை நெட்பிளிக்ஸ் வாங்கியது. அப்போதே இப்படத்தின் கதை மீது பெரிய எதிர்பார்ப்பு பலருக்கு கிடைத்தது. அந்த வகையில் படம் நேற்று ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. 

படத்தில் தனுஷ் திருடனாக நடித்து இருக்கிறார். திருட்டு தொழில் நடித்து கரா அப்பாவுக்காக செய்யும் முயற்சியே இப்படம். 

ஆனால் இப்படத்தில் வித்தியாசமான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால் பெரிய பிரபலங்கள் இதுவரை பார்க்காத ஒருவித கெட்டப்புகளில் களம் இறங்கி இருக்கின்றனர். கே எஸ் ரவிக்குமாரில் தொடங்கி எம் எஸ் பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்டோர் வித்தியாசமான நடிப்பை கொடுத்து இருக்கின்றனர். 

அப்பா மகன் பாசத்தையும், அவரின் நிலத்தின் உரிமையை கைப்பற்ற தனுஷின் வித்தியாசமான முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. மம்தா பைஜூவுக்கு கூட இதுவரை பார்க்காத ஒரு கெட்டப். 

பெரிய வெற்றியை குவிக்க வேண்டிய இப்படம் படு தோல்வி அடைந்தது என்னவோ அதிர்ச்சியான விஷயம் தான். இந்த இயக்குனரின் வெற்றியே கதையில் மட்டும் கவனம் செலுத்தாமல் பிரபலங்கள் மீது தனி கவனம் கொடுத்து இயக்கி இருக்கிறார். 

ஓடிடியில் இப்படம் இந்த வார இறுதிக்கு சரியான சாய்ஸ் என்றே சொல்லலாம். தனுஷும் ரியல் நடிப்பு அசூரனாக சீரியஸ் எமோஷனல் என மாஸ் காட்டி நடித்து இருக்கிறார். 

From Around the web