×

அமீர்கான் சகோதரரையும் அவமானப் படுத்திய கரண் ஜோஹர்… அடுத்த புகார்!

பாலிவுட்டில் உள்ள பலரை வளரவிடாமல் நசுக்குவதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மேல் புகார்கள் எழுந்து வருகின்றன.

 

பாலிவுட்டில் உள்ள பலரை வளரவிடாமல் நசுக்குவதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மேல் புகார்கள் எழுந்து வருகின்றன.

நடிகர் சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் இருக்கும் நெப்போட்டிஸமே காரணம் என சொல்லப்பட்டு வந்தது. மேலும் பலரும் கரண் ஜோஹர்தான் பாலிவுட்டில் வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் வாரிசுகளே பெரிய நடிகர்கள் போல காட்டி வருவதாக சொல்லப்பட்டது. இதை கங்கனா ரணாவத் போன்றவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னணி நடிகரும் அமிர்கானின் அண்ணனுமான பைசல் கான் தானும் கரண் ஜோஹரால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார். தனது சகோதரர் அமீர் கானின் 50 ஆவது பிறந்தநாள் விழா பார்ட்டியின் போது ‘நான் ஒரு நபரிடம் பேச முயன்ற போது என்னை பேசவிடாமல் ஆக்கும் விதமாக அவர் நடந்து கொண்டார் ‘ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News