Categories: latest news throwback stories

காசுக்கு ஆசைப்பட்டு கோட்டை விட்ட கரண்!.. கடைசியா விக்ரம் நடிச்சு சூப்பர் ஹிட்டான படம் எது தெரியுமா?

பல படங்களில் வில்லனாக நடித்து வந்த கரணுக்கு சில படங்களில் ஹீரோ வாய்ப்பும் கிடைத்து வந்தது. ஆனால், சரியான கதைகளை தேர்வு செய்யாமல் விட்ட நிலையில், ஒரு கட்டத்தில் அவர் காணாமலே போய்விட்டார்.

”ஸ்ரூவ்” கரண் என ஏகப்பட்ட மீம்கள் திடீரென அவரை டிரெண்ட் செய்தாலும், இன்னமும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விக்ரம் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தில் முதலில் கரண் தான் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியது என்றும் ஆனால் அதிக சம்பளம் கேட்டு அந்தப் படத்தின் வாய்ப்பை தவற விட்டுவிட்டார் கரண் என ஜேம்ஸ் வசந்தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டார் படத்துக்கு சிக்கலா மாறிய அரண்மனை 4!.. வார நாட்களிலும் வசூல் வேட்டை நடத்துதே!..

இயக்குனராக பாலா அறிமுகமான முதல் படம் சேது. தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட அந்த படத்தில் தான் முதலில் ஹீரோவாக நடிக்க கரணிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், தான் மிகப்பெரிய ஹீரோ குஷ்புவுடன் எல்லாம் ஜோடி போட்டு நடித்து வருகிறேன். இந்த சம்பளம் எனக்கு ரொம்பவே குறைவு, இன்னமும் அதிகம் சம்பளம் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் பெரிய தொகையை எல்லாம் சம்பளமாக கொடுக்க முடியாது என நினைத்த நிலையில், நண்பர் கென்னியிடம் சென்று கதை சொன்னோம். பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கிறேன், எப்படியாவது உயிரைக் கொடுத்தாவது இந்த படத்தில் நடித்து விடுகிறேன் என கென்னி எனும் விக்ரம் நடிக்க வந்த நிலையில், சியான் விக்ரமாக மாறிவிட்டார்.

இதையும் படிங்க: பாத்ததும் ஷாக் ஆயிட்டோம்!.. டிரெஸ்ஸே அப்படித்தானாம்!.. கிளுகிளுப்பு காட்டும் ஜான்வி கபூர்!..

சேது படம் எடுத்து முடித்த பின்னரும் அந்த படம் ப்ரிவ்யூ தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது. படத்தைப் பார்த்துவிட்டு பலரும் நல்ல ஒரு ஆர்ட் பிலிம் என்று மட்டுமே பாராட்டி விட்டு இந்த படம் எல்லாம் தியேட்டருக்கு வந்தால் ரசிகர்கள் யாரும் பார்க்க வர மாட்டார்கள் எனக் கூறிவிட்டு செல்வார்கள்.

ஆனால், அவர்கள் முகத்தில் எல்லாம் அறை கொடுத்தது போல சேது திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. விக்ரமுக்கும் சினிமாவில் நல்ல நடிகர் என்கிற பெயர் மட்டுமின்றி மிகப்பெரிய எதிர்காலத்தை அந்த படம் உருவாக்கித் தந்தது என ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அஜித் கேட்ட முதல் சம்பளம்!.. அதுவும் எதற்காக தெரியுமா?!.. அப்பவே அவர் அப்படித்தான்!…

Saranya M
Published by
Saranya M