தேனிலவில் நண்பருடன் உறவு கொள்ள கணவர் வற்புறித்தினார்... பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை
பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். அவர் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரான சஞ்சய் கபூர் என்பவரை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு கரிஷ்மாவும், கணவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். சஞ்சய் கபூர் பற்றி கரிஷ்மா கூறியதாவது,
திருமணத்திற்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. தினம் தினம் நான் கஷ்டப்பட்டேன். நானும், சஞ்சயும் தேனிலவுக்கு சென்றபோது நடந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. என்னை தன் நண்பர் ஒருவருடன் உறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். நான் மறுத்ததற்கு என்னை அடித்தார். நான் அவரின் நண்பருடன் உறவு கொள்ள விலை பேசியிருக்கிறார் என்றார்.
கரிஷ்மாவை திருமணம் செய்த பிறகும் கூட சஞ்சய் தன் முதல் மனைவியுடன் உறவில் இருந்தாராம். இது குறித்து அறிந்த கரிஷ்மா சஞ்சயிடம் கேட்டுள்ளார். அதற்கு சஞ்சய் தன் தவறை ஒப்புக் கொள்ளாமல் கரிஷ்மாவை அடித்திருக்கிறார்.
மேலும் நான் கர்ப்பமாக இருந்தபோது என் மாமியார் புத்தாடையை பரிசாக கொடுத்தார். கர்ப்பமாக இருந்ததால் அந்த உடை எனக்கு சரிபட்டு வரவில்லை. அதற்கு என் மாமியாரும், கணவரும் சேர்ந்து அடித்தார்கள் என்றார்.
கணவரிடம் அடி உதை வாங்கி வந்த கரிஷ்மா தன் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு சஞ்சயை பிரிய முடிவு செய்தேன் என தெரிவித்துள்ளார்.