சூர்யாவின் பாலிவுட் கனவை காலி செய்த கங்குவா!.. என்ன ஆச்சுனு இம்புட்டு பண்ணுறீங்க?

 
Kanguva: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை குவித்திருக்கும் நிலையில் தற்போது அவருடைய அடுத்த கட்ட ப்ளானில் மிகப்பெரிய சொதப்பல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் சூர்யா. தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த சூர்யா ஒரு கட்டத்தில் கோலிவுட்டில் நடிக்காமல் பொறுமை காத்து வந்தார். அதற்கு அவருடைய திடீர் பாலிவுட் ஆசைதான் காரணம் என கூறப்படுகிறது. இதையும் படிங்க:  ஞானவேலுக்கு 100 கோடி.. சூர்யாவுக்கு எத்தன கோடி தெரியுமா? ‘கங்குவா’ கொடுத்த பெரிய லாஸ் அதற்கேற்ப தன்னுடைய குடும்பத்துடன் மும்பை பக்கம் செட்டில் ஆகினார். இதற்கு வேறு காரணம் கூறப்பட்டாலும் ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்ற சூர்யாவின் ஆசை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அங்கு சென்றதும் அதற்குரிய வேலைகளையும் தொடங்கி நடந்து வந்ததாக  கிசுகிசுக்கப்படுகிறது. இப்படித்தான் இவருக்கு பாலிவுட் பிரபல இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்த வாய்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் சூர்யாவின் சினிமா கேரியரின் முக்கிய படமாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா தன்னுடைய வாடிவாசல் உள்ளிட்ட பல தமிழ் படங்களின் வாய்ப்பையும் மறுத்து இருக்கிறார். கோலிவுட்டில் கிடைத்த படங்களை எல்லாம் தட்டிக் கொண்டே வர பாலிவுட் படம் தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதையும் படிங்க:  அஜித், சூர்யா, தனுஷை ஓவர் டேக் செய்த எஸ்.கே!… அடுத்த விஜயா இல்ல சூப்பர்ஸ்டாரா?!…
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய மோசமான விமர்சனங்களை குறித்து வருகிறது. இதனால் தற்போது கர்ணன் படக்குழு குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 600 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்தை இப்போது தொடங்க வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்து இருக்கிறது.
Akhilan
Akhilan

3138 Articles

From Around the web