×

கண்டா வரச்சொல்லுங்க... கர்ணன் படக்குழு சொல்லும் புதிய அப்டேட்
 

கர்ணன் படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

 

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படம் கர்ணன். கோலிவுட்டின் முன்னணி நாயகனாக டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷ் நடித்திருக்கிறார். இப்படத்தில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பரபரப்பாக திருநெல்வேலி அருகே படப்பிடிப்புகள் எல்லாம் கடந்த வருட இறுதியில் முடித்துவிட்டது படக்குழு. தியேட்டர்களில் பெருகி வரும் வரவேற்பை தொடர்ந்து, ஏப்ரல் 9-ம் தேதி படத்தினை தியேட்டரில் ரீலிஸ் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் தனுஷ் கர்ணனாகவே வாழ்ந்து இருப்பதாக செய்திருந்த ட்வீட் பெரும் வைரலாக பரவியது. 


இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க’ எனத் தொடங்கும் முதல் சிங்கிளை நாளை 8 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News