×

என்னை திட்டாதீங்க எப்போவ்!... ரசிகர்களிடம் கெஞ்சும் கர்ணன் வில்லன் நட்டி...

 
என்னை திட்டாதீங்க எப்போவ்!... ரசிகர்களிடம் கெஞ்சும் கர்ணன் வில்லன் நட்டி...

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மாரி செல்வராஜ். அப்படத்திற்கு பின் தனுஷை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். 

இப்படம் கடந்த 9ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜின் இயக்கமும், தனுஷின் நடிப்பும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பேசும் இப்படம் பல விருதுகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் கண்ணபிரான் என்கிற கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக  அசத்தலாக நடித்திருப்பவர் நடிகர் நடராஜ். ஒடுக்கப்பட்ட வன்மம் கொண்டவராக அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, தியேட்டர்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் அது கதாபாத்திரம் என்பதை மறந்து அவரின் திட்டி வருகின்றனர்.  அதோடு, அவரின் செல்போன் எண்ணிலும் பலரும் மேசேஜ் மூலம் அவரை திட்டி வருகின்றனராம்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என்ன திட்டாதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி.’ என பதிவிட்டுள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News