Categories: Cinema News latest news

ஒட்டுமொத்த கோலிவுட் நடிகைகளுக்கும் கள்வனாக இருந்த ஒரே நடிகர்…! அதில் மூன்று நடிகைகள் மட்டும் விதிவிலக்கு…

காதல் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். அது 50களிலும் சரி, 80 களிலும் சரி இன்றைய காலகட்டத்திலும் சரி சினிமாவில் ஏகப்பட்ட காதலை நாம் கடந்து வந்து கொண்டு தான் இருக்கிறோம். நட்சத்திர தம்பதிகளாக எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் இருந்தே தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

மேலும் இதனிடையில் பிளே பாயாக சில நடிகர்களும் ஒவ்வொரு தலைமுறைகளாக வந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். ஜெமினிகணேசனில் இருந்து கார்த்திக், சிம்பு என காதல் வலையில் சிக்கி இதன் மூலம் பிரபலமானவர்கள் இவர்கள். அதிலும் நடிகர் கார்த்திக்கை நவரச நாயகன் என்றே கூறுவார்கள்.

மேலும் இவரின் துருதுரு பேச்சும் குறும்புத்தனமும் 80களில் உள்ள நடிகைகளை தள்ளாட வைத்தது என்றே கூறலாம். நிறைய நடிகைகள் கார்த்திக்கை காதலித்தார்கள் என இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்தார். ஆனால் கார்த்திக் காதலித்ததோ மூன்று நடிகைகளை மட்டுமே என்றும் கூறினார்.

இதையும் படிங்கள் : கமலை துரத்தி துரத்தி காதலித்த நடிகை..! கடைசில அவங்க நிலைமை என்னாச்சுனு தெரியுமா..?

அந்த மூன்று நடிகைகளில் நடிகை ராகினியை தான் திருமணம் செய்யும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது நடிகர் கார்த்திக்குக்கு. அதுவும் நடிகர் கார்த்திக்கும் நடிகை ராகினியும் ஒரு படப்பிடிப்பிற்காக கோத்தகிரி சென்ற சமயத்தில் அங்கு உள்ள ஒர் அம்மன் கோயிலில் தாலியை மறைத்து பூஜை செய்து அந்த தாலியை தான் தங்கியிருந்த அறையின் பூஜை அறையில் வைத்து ராகினியின் கழுத்தில் யாருக்கும் தெரியாமல் கட்டினாராம். அதன் பின் சென்னையில் அனைவரின் முன் வரவேற்பு நடத்தப்பட்டது என்ற செய்தி எல்லாம் இணையத்தில் கசிந்தது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini