×

அன்பு தம்பிகளுக்கு கார்தியின் உருக்கமான வேண்டுகோள்... என்ன சொன்னார் தெரியுமயா?

அமெரிக்காவில் பயின்ற கார்த்தி, இயக்குநராகும் ஆசையில் மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்து, பின்னர் அமீரின் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார்.

 
20201021_121009_0000

அமெரிக்காவில் பயின்ற கார்த்தி, இயக்குநராகும் ஆசையில் மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்து, பின்னர் அமீரின் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்துக்கு பிறகு கார்த்திக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டனர். இப்போதுவரை தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தி, இன்று தமது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு தமது ரசிகர்களுக்கு கார்த்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கார்த்தி கூறியிருப்பதாவது, “அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, 'மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்'. இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்!” என்று தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News