×

ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் கார்த்தி: ஹீரோயின் யார் தெரியுமா?

'பருத்தி வீரன்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி. முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவிற்கு அவ்வளவு அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார். 

 
karthi

'பருத்தி வீரன்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி. முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவிற்கு அவ்வளவு அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார். 

இவருக்கு ஜோடியாக இப்படத்தில் பிரியாமணி நடித்திருந்தார். இதில் நடித்ததன்மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்தார் கார்த்தி. இந்த படம் இன்றளவிலும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது.

viruman
viruman

முதல் இரண்டு படங்களும் கிராமத்து பாணியில் அமைந்திருந்தது. இப்படங்களுக்காக அவர் கிட்டத்தட்ட 5 வருடங்களை செலவிட்டார். இதையடுத்து சிட்டி கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் நீண்ட இடைவேளைக்குப் பின் முத்தையா இயக்கிய 'கொம்பன்' படம் மூலம் மீண்டும் கிராமத்து கதைக்கு வந்தார்.

லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருந்தார். மாமன் - மருமகன் பாசத்தில் குடும்ப படமாக அமைந்த இப்படம் குடும்பங்களை கவர்ந்த படமாக மாபெரும் வெற்றிபெற்றது. இந்தப்படம் கடந்த 2015ல் வெளியாகியிருந்தது.

இப்படத்திற்குப் பின் முத்தையாவும் ஒரு ஹிட் கொடுப்பதற்கு தடுமாறி வருகின்றார். இந்நிலையில் இந்தக்கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளது. முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, ராஜ்கிரண் நடிக்க உள்ளனர். 2D எண்டெர்டைன்மெண்ட் சார்பில் சூர்யா இப்படத்தை தயாரிக்கிறார்.

viruman
viruman

இப்படத்திற்கு 'விருமன்' என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக யார் நடிப்பார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. படத்தின் டைட்டிலை பார்க்கும்போதே இதும் ஒரு ஜாதி படம் தான் என்பது தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News