என் நண்பனுக்கு ஒன்னுனா ஓடி வருவேன் - கார்த்தியின் செயலால் நெகிழ்ந்த ஜெயம் ரவி!
ஜெயம் ரவி:
முன்னதாக நடிகர் ஜெயம்ரவி குடும்ப பிரச்சனை குறித்து சமீபத்தில் பிரஸ்மீட் ஒன்றில் மணமடைந்து மி பேசியிருந்தார் . இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பலரும் ஜெயம் ரவிக்கு ஆதரவு குரல் கொடுத்தார்கள்.

அப்போது என் நண்பன் எனக்காக உதவி செய்வான் என்று கார்த்தி ஓரிடத்தில் நடிகர் ஜெயம் ரவியை மென்ஷன் பண்ணி பேசி இருப்பார். இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது மீண்டும் பேசு பொருளாக இருக்கிறது. ஆம் ஜெயம் ரவி மிகவும் மனம் நொந்து மனவேதனையில் இருக்கும் இந்த சமயத்தில் நண்பனை சென்று ஓடி பார்த்திருக்கிறார் நடிகர் கார்த்தி .
கார்த்தியின் ஆறுதல்:
அப்போது தன்னுடைய நண்பன் ஜெயம் ரவிக்கு ஆறுதல் கூறியிருக்கும் நடிகர் கார்த்தி... எதற்கும் மனம் தளர வேண்டாம். நான் எப்போதும் உனக்காக இருப்பேன் என்று கார்த்தி உறுதி அளித்ததுடன் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என ஜெயம் ரவியை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் கார்த்தி.

இந்த விஷயம் ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவனே ஆபத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என இது எடுத்துரைக்கிறது என ரசிகர்கள் இந்த நட்பின் ஆழத்தை உணர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
