karthi
கார்த்தி நடிப்பில் கடைசியாக சுல்தான் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஓரளவு நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு அவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த படம் பிரமாண்ட திரைப்படம். இதன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே சர்தார், விருமன் என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். விரைவில் இவ்விரு படங்களின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த படத்தை அடுத்து கார்த்தி, அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. கார்த்தியும் கதை கேட்டு ஓகே செய்திருந்தாராம். அதனையும் சர்தார் பட தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருக்கிறது.
இதையும் படியுங்களேன் – மறைந்த நடிகையின் தேசிய விருதை தட்டி பறித்த கமல்ஹாசன்.! ஒரு சின்ன ரீவைண்ட்.!
ஆனால், கார்த்தி, தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளரின் படத்தில் அடுத்தடுத்து உடனே நடிக்க மாட்டாராம். அதனால், கார்த்தி உடனே சர்தார் தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுப்பது கடினம் என்கிறது கோலிவுட்.
இதனை எப்படியோ தெரிந்துகொண்ட அருண்ராஜா காமராஜா, சத்தமின்றி தன்னுடைய நண்பர் சிவகார்த்திகேயனுக்கு ஓர் கதை கூறிவிட்ட்டார். அவரும் ஓகே செய்துவிட்டாராம். ஆதலால், கார்த்தி கைகழுவினால் தன்னுடைய நண்பர் பக்கம் செல்ல அருண்ராஜா திட்டமிட்டுள்ளாராம்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…