×

சுல்தான் செட்டில் ராஷ்மிகா அடித்த லூட்டி...!

ராஷ்மிகா அடிக்குற லூட்டியே வேற என நடிகர் கார்த்தி புகழ்ந்துள்ளார். 
 
சுல்தான் செட்டில் ராஷ்மிகா அடித்த லூட்டி...!

நடிகர் கார்த்தி - ராஷ்மிகா நடித்திருக்கும் சுல்தான் படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் ஓடிடியில் ரிலீஸ் என்று கூறப்பட்ட நிலையில், நேரடியாகத் தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழில் ராஷ்மிகா நடிக்கும் முதல் படம் இதுதான். படத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகாவை நடிகர் கார்த்தி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அவர் கூறுகையில், ``சுல்தான் படத்தில் எனக்கு ஜோடியா நடித்திருக்கும் ராஷ்மிகா, சரியான விளையாட்டுப் பெண். தமிழில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கவே, பொறுத்திருந்து கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். 


நான்கு மொழிகள் பேசும் இந்த கூர்க் பொண்ணுக்கு வட இந்தியாவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் செம லூட்டி அடித்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகா, ஷாட்டுக்குள் வந்ததும் நடிப்பில் அசத்துகிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கு’’ என்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News