விஸ்வநாத் & சன்ஸை பாத்துட்டு கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?
Vishwanath & Sons : சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக மமிதா பைஜு நடித்திருக்கிறார்.
தற்போது, இந்த படத்தை பார்த்து ரசித்த சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி எக்ஸ் தளத்தில் "இயக்குநர் வெங்கி அட்லூரியின் என்ன மாதிரியான ஒரு ரைட்டிங் .
அழகான கேரக்டர்ஸ் மற்றும் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் உட்பட அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்கள்.
#VenkyAtluri what writing man…!! Beautiful characters and stunning performances!! A wholesome film that keeps you smiling throughout and fills your heart with love!! Would love to watch it again….Many Congratulations @vamsi84 for #VishwanathAndSons!! @Suriya_offl your Class… pic.twitter.com/4i8LDV3nlg
— Karthi (@Karthi_Offl) August 14, 2026
முழு படமுமே முகத்தில் புன்னகையுடன் பார்க்க வைத்தது. படத்தை திரும்பவும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்படத்தை தயாரித்துள்ள நாக வம்சிக்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.