'ஜன நாயகன்' இடைவேளையில் சூப்பரான ப்ரோமோவால் ரசிகர்களை ஈர்க்கும் கார்த்தியின் 'சர்தார் 2'!
விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் 'தளபதி'-யின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
PVR INOX திரையரங்குகளில் 'ஜன நாயகன்' படத்தின் இடைவேளையின் போது 'சர்தார் 2' படத்தின் சூப்பரான ப்ரோமோ திரையிடப்படுகிறது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறது.
இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். அதுவும் அப்பா, மகன் என டபுள் ஆக்ஷனில். இதை இயக்கியிருப்பது 'இரும்புத்திரை' பி.எஸ்.மித்ரன் தான்.
EXCLUSIVE: PVR Advertisement with the team #Sardar2 🔥
— The Karthi Team (@TheKarthiTeam) July 25, 2026
Shhhh!!! RELEASING ON SEPTEMBER 10.@Karthi_Offl @Prince_Pictures #Karthi pic.twitter.com/740Japjt00
முதல் பார்ட்டில் சங்கி பாண்டே வில்லனாக நடித்திருந்தார். பார்ட் 2-வின் வில்லன் எஸ்.ஜே.சூர்யாவாம். இந்த படத்தை செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
