பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி 2 வேடங்களில் நடிக்கும் 'சர்தார் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கார்த்தி அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வரும் புதிய படம் 'சர்தார் 2'. சூப்பர் ஹிட்டான முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தான் இதையும் இயக்கி கொண்டிருக்கிறார்.
இதில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, ரஜிஷா விஜயன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், VTV கணேஷ், பாபு ஆண்டனி, அன்பு தாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை எஸ்.லக்ஷ்மன் குமாரின் 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது, இந்த படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. பார்ட் 1-ஐ போல் இதுவும் மிகப் பெரிய வெற்றியை பெறுமா என்பதை செப்டம்பர் வரை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.
Sky-shattering update ⚡️#Sardar2 in cinemas from Sep 10th, 2026, WORLDWIDE💥
— Prince Pictures (@Prince_Pictures) June 24, 2026
Agent @Karthi_Offl arrives🔥
Get ready for the mission of a lifetime ‼️@Psmithran @ivyofficial2023 @iam_SJSuryah @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69#OnceAspyAlwaysAspy… pic.twitter.com/iT45EZgFAA
