கார்த்தியின் 'சர்தார் 2' படத்தின் 30 நிமிட காட்சிகளை பார்த்துவிட்டு உடனே கைப்பற்றிய புதிய டிவி சேனல்!
கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ஹிட்டான படம் 'சர்தார்'. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போதே, பார்ட் 2-வுக்கான ஐடியாவையும் சொல்லி கார்த்திக்கு டபுள் சந்தோஷத்தை கொடுத்தவர் தான் இதன் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.
இவர் இப்போது 'சர்தார் 2'-வின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக வொர்க் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதில் அப்பா, மகன் என வலம் வரப்போகும் இரண்டு கார்த்திகளுக்கும் எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
மேலும், ரஜிஷா விஜயன், யோகி பாபு, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், VTV கணேஷ், பாபு ஆண்டனி, அன்பு தாசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

எஸ்.லக்ஷ்மன் குமாரின் 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்து கொண்டிருக்கிறார். தற்போது, இப்படத்தின் 30 நிமிட காட்சிகளை பார்த்துவிட்டு உடனே சாட்டிலைட் உரிமையை 'சோனி விழா' என்ற புதிய சேனல் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
