சர்தார் 2-வின் அடுத்த அப்டேட்டுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!
கார்த்தி அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த 'சர்தார் 2' படத்தை வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ரஜிஷா விஜயன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார்கள்.
சாம்.சி.எஸ் தான் இதற்கு இசை. அவருக்கு இது 100-வது படமாம். இதை 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'Ivy எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்திருக்கிறது.
“உறுமிடும் ஒரு யாளி ஆகும்
— Prince Pictures (@Prince_Pictures) July 30, 2026
சூரா தீரா” is what the world says about him 💥
What’s in store for tomorrow? Stay Tuned! @Psmithran @ivyofficial2023 @iam_SJSuryah @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69#OnceAspyAlwaysAspy #Sardar2FromSep10 pic.twitter.com/iuh2wFLR27
தற்போது, படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு, நாளை (ஜூலை 31-ஆம் தேதி) ஒரு அப்டேட் வரும் என்று அறிவித்துள்ளனர். இது ட்ரெய்லருக்கா அல்லது முதல் சிங்கிள் ட்ராக்கிற்கா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
