கார்த்தி Vs எஸ்.ஜே.சூர்யா... வெறித்தனமான சர்தார் 2 டீசர்!

 
Sardar 2

ஸ்பை த்ரில்லர் ஜானர் படங்களுக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர்களுக்காக தமிழில் ரெடியாகி இருக்கும் புதிய ஸ்பை த்ரில்லர் படம் தான் 'சர்தார் 2'.

கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்திருக்கும் இந்த படத்தை இதனுடைய முதல் பாகத்தை எடுத்த பி.எஸ்.மித்ரன் தான் இயக்கியிருக்கிறார். 

இதில் ரஜிஷா விஜயன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர். தற்போது, இதன் வெறித்தனமான டீசரை வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசர் ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருகிறது. படத்தை வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

From Around the web