சூர்யாவின் பிறந்தநாளன்று கார்த்தி கொடுக்கப்போகும் ட்ரீட்!

 
Suriya karthi

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் வருகிற ஜூலை 23-ஆம் தேதி தான். அன்று சூர்யா தனது 47-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடலாம் என்று நினைத்தார்.

ஆனால், அன்று தான் நடிகரும், தமிழ்நாடு முதல்வருமான விஜய்யின் 'ஜன நாயகன்' படம் ரிலீஸ் ஆவதால், ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸை சூர்யா ஒத்தி வைத்தார்.

Ps mithran sardar 2

தற்போது, சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி அதே தேதியில் தனது 'சர்தார் 2' படத்தின் டீசரை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கிறார்.

ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான இது வருகிற செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி தான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது. இதில் கார்த்தி அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறாராம்.

From Around the web