Vaa Vaathiyare: ரிலீஸ் தேதியில் மாற்றம்! ‘வா வாத்தியாரே’ படத்தின் புதிய அப்டேட்
கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மெய்யழகன். பெரிய கமெர்ஷியல் வெற்றி இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு கார்த்தி வா வாத்தியாரே, சர்தார் 2, மார்ஷல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் வா வாத்தியாரே படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். இந்தப் படத்தை ஸ்டுடீயோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே வா வாத்தியாரே படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்றது. இந்தப் படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டதாக இப்போது சோசியல் மீடியாவில் செய்திகள் வர தொடங்கியிருக்கிறது. டிசம்பர் 12 ஆம் தேதி படம் ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மெய்யழகன் படத்திற்கு பிறகு கார்த்திக்கு இது ஒரு நீண்ட இடைவெள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வா வாத்தியாரே படத்தின் படப்பிடிப்பு எப்பொழுதோ முடிந்து விட்டது. ரிலீஸ் தேதிக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதும் அந்த தேதியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் எம்ஜிஆர் பேரனாக கார்த்தி நடித்துள்ளார். வழக்கம் போல இருக்கும் காமெடி ஆக்ஷன் செண்டிமெண்ட் கலந்த படமாக இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் மிகவும் கவனம் செலுத்துபவர் கார்த்தி. அதுவும் அவருடைய கெரியரில் பெரும்பாலும் புது முக இயக்குனர்களுக்கே அவர் வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே அவருடைய நடிப்பில் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது கைதி 2. டெல்லி எப்படி உருவானான்? அவனுடைய ஃபேமிலிக்கு என்ன ஆனது? ஏன் ஜெயிலுக்கு போனான் போன்றவற்றிற்கு விளக்கம் தரும் படமாகத்தான் கைதி 2 இருக்கும்.
