கார்த்தியா? விக்ரமா?-ன்னு யோசித்து கொண்டிருந்த 'BLAST' இயக்குநர்... லிஸ்டில் 3-வதாக இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்!

 
Karthi vikram blast director subash k raj

முதல் படமே ஆக்ஷன் ஜானரில் கொடுத்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியவர் தான் இயக்குநர் சுபாஷ்.கே.ராஜ். இவர் இயக்கிய 'பிளாஸ்ட்' படத்தில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடித்திருந்தார்.

அர்ஜுனுக்கு ஜோடியாக அபிராமி நடிக்க, இவர்கள் இருவருக்கும் மகளாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருந்தார். இதை 'AGS' நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

பொதுவாகவே முதல் படம் சூபோர் ஹிட்டாகி விட்டால், அந்த இயக்குநருக்கு பல முன்னணி ஹீரோக்கள் போன் பண்ணி பாராட்டி விட்டு, அடுத்து என்ன கதை இருக்கு, எனக்கு சொல்லுங்க, நாம பண்ணுவோம் என்று சொல்வார்கள்.

அதே தான் இயக்குநர் சுபாஷ்.கே.ராஜுக்கும் நடந்து வருகிறது. தமிழில் ஆல்ரெடி நடிகர்கள் கார்த்தி மற்றும் 'சீயான்' விக்ரம் இவரிடம் கூட்டணி அமைப்பது குறித்து பேசியிருக்கிறார்கள்.

Blast director subash k raj nani

இந்த லிஸ்டில் இப்போது தெலுங்கு நடிகர் நானியும் இணைந்து கொண்டார். அவர் சுபாஷ்.கே.ராஜை நேரில் அழைத்து, சேர்ந்து வொர்க் பண்ணுவது தொடர்பாக பேசியிருக்கிறார். சுபாஷ் எந்த ஹீரோவை டிக் அடிக்கப்போகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

From Around the web