கார்த்தியுடன் முதன்முறையாக கைகோர்க்கும் மோகன் ராஜா... கார்த்தியின் 31வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

 
karthi

நடிகர் கார்த்தியின் 31வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை முன்னணி இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தக் கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்தப் படம், வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதைத் தொடர்ந்து, கார்த்தி 'மார்ஷல்' திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்யும் கட்டத்தை எட்டியுள்ளார். இயக்குநர் தமிழ் இயக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், ஆதி பினிஷெட்டி, சத்யராஜ், பிரபு, லால் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனையடுத்து, சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கும் புதிய படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். 

இந்த நிலையில், கார்த்தியின் 31வது படத்தை எஸ். லட்சுமணன் குமார் தயாரிப்பில் இயக்குநர் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக கார்த்தியுடன் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags

From Around the web