
Cinema News
இந்த படத்துல நான் நடிக்க மாட்டேன்!.. அடம்பிடித்த கார்த்திக்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!..
Published on
By
தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் அறிமுகமானவர் கார்த்திக். மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் இவர். பதினாறு வயதினிலே படத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார்.
நிறைய காதல் படங்களில் நடித்ததால் நவசர நாயகன், காதல் இளவரசன் ஆகிய பட்டங்கள் இவருக்கு கிடைத்தது. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்தது. எந்த நடிகரையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு ஸ்டைலை கடைபிடித்து ரசிகர்களை கவர்ந்தவர்தான் கார்த்திக். கார்த்திக்கின் உடல் மொழி எந்த நடிகருக்கும் வராது.
இதையும் படிங்க: கார்த்திக்,வடிவேலு நடித்த அந்த சூப்பர்ஹிட் படக்காட்சிகள் அப்பவே வந்திருக்கா!.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?..
மிகவும் துள்ளலாக, துறுதுறுவென இருக்கும் அவரின் ஸ்டைல் பல பெண் ரசிகைகளையும் அவருக்கு பெற்றுக் கொடுத்தது. மிகவும் திறமையான நடிகராக பார்க்கப்பட்டார். ஆனால் படப்பிடிப்புக்கு மிகவும் தாமதமாக செல்வது உள்ளிட்ட சில காரணங்களால் மார்க்கெட்டை இழந்தார்.
ஒருபக்கம், விஜய், அஜித் ஆகியோரின் வருகையும் கார்த்திக்கின் மார்க்கெட்டை காலி செய்தது. தற்போது அவரின் மகன் கவுதம் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி சில நாட்கள் நடித்தும்விட்டு அதன்பின் அந்த படத்தில் அவர் நடிக்க மறுத்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
இதையும் படிங்க: சேது படத்தின் கதையை கார்த்திக்கிடம் சொன்ன பாலா!.. நவரச நாயகன் அடித்த நச் கமெண்ட்!..
விக்ரமின் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளியான திரைப்படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். இந்த படத்தில் சில நாட்கள் நடித்த கார்த்திக் படத்தின் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு ‘இந்த படம் நான் ஏற்கனவே நடித்த நந்தவனத்தேரு படம் போலவே இருக்கிறது. நான் இனிமேல் நடிக்க மாட்டேன்’ என சொல்லி இருக்கிறார்.
அதன்பின் அவரிடம் பேசிய விக்ரம் ‘நந்தவனத்தேரு படத்தின் கதைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. உங்களுகு பிடிக்கவில்லை எனில் விலகிக்கொள்ளுங்கள். நான் வேறு ஒரு ஹீரோவை வைத்து இதே கதையை எடுத்து ஹிட் கொடுத்து காட்டுகிறேன்’ என சொல்லியிருக்கிறார். அதன்பின் ‘உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஓகே’ என சொல்லி நடித்திருக்கிறார் கார்த்திக். விக்ரம் சொன்னது போலவே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.
Vijay: தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும்...
இந்த வருட தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் Dude, துருவ் விக்ரமின் பைசன், ஹரீஸ் கல்யாணின் டீசல் ஆகிய மூன்று படங்களும் வருவது...
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்....
Hariskalyan: இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க...
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட்...