Categories: Cinema News latest news

அவமானப்படுத்திய நடிகர் கார்த்திக்.. பெருந்தன்மையால் நிமிர்ந்து நின்ன ஆனந்தராஜ்.. இது செம மேட்டரு!..

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தை மிரட்டும் அளவிற்கு கொண்டு போனவர்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஆனந்த்ராஜ். ஒரு போலீஸ் ஆஃபிஸராக வேண்டும் என தந்தையின் விருப்பத்திற்கு எதிராக சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் சென்னை பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார் ஆனந்த்ராஜ்.

karthik

80களில் முன்னனி நட்சத்திரங்களின் ஆஸ்தான வில்லனாகவே வலம் வந்தார் ஆனந்த்ராஜ். பிரபு, சத்யராஜ், கார்த்திக் விஜயகாந்த் போன்ற நாயகர்களுக்கு முக்கிய வில்லனாகவே நடித்து வந்தார். ரஜினியின் பாட்ஷா படத்தில் இவரின் மிரட்டும் வில்லத்தனமான நடிப்பால் தியேட்டரில் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

இதையும் படிங்க : “உதயநிதி நடிக்காமல் போனது கமல்ஹாசனுக்கு நிம்மதிதான்!!”… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது??

அந்த அளவுக்கு அவரின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து பல படங்களில் வில்லன்களாக நடித்து வந்த ஆனந்த்ராஜ் சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை காட்சிகளிலும் தன் திறமையை நிரூபித்து வருகிறார். இவரின் அறிமுகம் சற்று வித்தியாசத்திற்குரியது.

karthik

1989 ஆம் ஆண்டும் வெளியான சோலைக்குயில் படம். இந்த படத்தில் நடிகர் கார்த்திக், நடிகை குயிலி, நடிகை காந்திமதி, கோவைசரளா, ராதாரவி போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் தியாகுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முதலில் தியாகு கதாபாத்திரத்திற்கு நடிக்க வேண்டியிருந்தது ஆனந்த்ராஜ் தானாம்.

ஆனந்த்ராஜுக்கும் சோலைக்குயில் தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணிக்கும் நல்ல நெருக்கமாம். ஆகவே ஆனந்த்ராஜை நடிக்க வைக்க அழகன் தமிழ்மணி படப்பிடிப்பிற்கு அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு முன்பாகவே நடிகர் தியாகு வந்து நிற்கிறாராம்.

இதையும் படிங்க : என் முதல் படத்தின் ஹீரோவே விஜய் தான்!.. சிட்டிசன் பட இயக்குனர் தவறவிட்ட அந்த வாய்ப்பு!.. அஜித்திற்கு எப்படி போனது?..

தயாரிப்பாளர் தியாகுவிடம் என்ன வந்திருக்கிறாய் என கேட்டாராம். அதற்கு தியாகு கார்த்திக் தான் சொன்னான். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. நடி என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். உடனே தயாரிப்பாளர் கார்த்திக்கிற்கு போன் செய்து கேட்டாராம்.

anandraj

கார்த்திக்கும் ஆனந்த்ராஜ் பற்றி தயாரிப்பாளரிடம் ‘அந்த ஆளு புதுசு, எதுக்கு புதுசா போட்டுகிட்டு, பேசாமல் தியாகுவை நடிக்க வையுங்கள்’ என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு ஆனந்த்ராஜ் நடந்ததை அறிந்து தயாரிப்பாளரிடம் பரவாயில்லை அப்பா, நீங்கள் அந்த படத்திற்கான வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini