டோரதி ஓடிடியில் வருது!.. தயவு செஞ்சி SPOIL பண்ணிடாதீங்க!.. கார்த்திக் சுப்பராஜ் கோரிக்கை!...

 
dorothy

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய பலரும் நடித்து கடந்த மாதம் 25ம் தேதி வெளியான திரைப்படம் டோரதி. இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஏற்கனவே இரண்டு பாடல்கல் ஹிட் அடித்த நிலையில் படமும் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. ஆணாக இருந்து பெண்ணாக மாறும் திருநங்கை கதையை கார்த்திக் சுப்புராஜ் ஒரு புதிய கொணத்தில் அணுகியிருந்தார். இந்த படத்தை திருநங்கைகள் பெரிதும் பாராட்டுவதோடு கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றியும் தெரிவித்தனர். அதோடு பல திரை பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி பேசியிருந்தனர். இந்நிலையில், அக்டோபர் 23ம் தேதி இன்று நெட்பிளிக்ஸில் இந்த திரைப்படம் வெளியாகிறது..

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டோரதி படத்தை தியேட்டரில் அல்லது ஓடிடி தளத்தில் பாருங்கள்.. ஓடிடியில் வெளியான பின்னர் படத்தின் கிளிப்புகளை வலைதளங்களில் பதிவிட்டு முதல் முறை பார்ப்பவர்களின் அனுபவத்தை கெடுக்கவேண்டாம்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.

Tags

From Around the web