டோரதி கிளைமேக்ஸ் பாடல் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!..
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம் வெளியாகி 50 நாட்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு படத்தின் முத்துமணி பாடலின் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சனந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதிலும் இளையராஜா இசையமைத்து, அவரே ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடிய முத்துமணி பாடல் தனி கவனம் பெற்றது.
இந்நிலையில், திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்ததுடன், கிளைமேக்ஸில் இடம்பெற்ற முக்கியமான முத்துமணி பாடல் வீடியோவும் தற்போது வெளியிட்டுள்ளார்.
மேலும், இப்படம் ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகும் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்திருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
