
latest news
Karur: தலைவனா நீ?.. நீ முட்டாள்.. உன் தொண்டன் அடி முட்டாள்!.. பொங்கிய கரு பழனியப்பன்…
Karur: தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்றிருந்தார். மதியம் 12:3 மணிக்கு வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 11 மணி முதல் இருந்து அங்கே மக்கள் வர துவங்கினார்கள். ஆனால் விஜய் அந்த இடத்திற்கு செல்லும்போது இரவு 7 மணி ஆகிவிட்டது. எனவே கிட்டத்தட்ட 8 மணி நேரங்கள் அவரை பார்க்க அவரின் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் தண்ணீர், உணவின்றி வெயிலில் நின்று கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக பலருக்கும் உடல் சோர்வு ஏற்பட்டது. அதோடு விஜய் அங்கே வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலரும் கீழே விழுந்து மிதிபட்டு மூச்சு திணறி 41 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 3 நாட்களாகவே இந்த விவகாரம் எல்லோராலும் விவாதிக்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. ‘இந்த சம்பவத்திற்கு விஜய்தான் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு அரசியல் தெரியவில்லை. சம்பவம் நடந்தது தெரிந்தும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்னை ஓடிவிட்டார். அவரின் கட்சி நிர்வாகிகள் யாரும் கரூர் மருத்துவமனைக்கு கூட செல்லவில்லை’ என்று திமுகவினர்கள் குற்றம் சொல்லி வருகிறார்கள்.
ஆனால் தவெகவினரோ ‘இது முழுக்க முழுக்க திட்டமிட்ட சாதி. கூட்டத்தில் செருப்பு வீசினார்கள். கல் விசினார்கள். ஆம்புலன்ஸ் வண்டியை உள்ளே விட்டார்கள். வேண்டுமென்றே கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தினார்கள்’ என அவர்கள் குற்றம் சொல்லி வருகிறார்கள். இதில் வழக்குப்பதிவு செய்து தவெக நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் எதுவும் பேசாமல் இருந்த தவெக தலைவர் விஜய் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ‘மக்களின் பாதுகாப்பு எனக்கு முக்கியம். 5 இடங்களில் கூட்டம் போட்டிருக்கிறோம். ஆனால் கரூரில் மட்டும் இப்படி நடந்து விட்டது. இதற்கு காரணம் யார் என்பது மக்களுக்கு தெரியும். அது ற்றிய உண்மை விரைவில் வெளியே வரும். என்னை பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நிர்வாகிகளை எதுவும் செய்ய வேண்டாம். இன்னும் தைரியமாக அரசியலில் தொடர்வேன்’ என பேசியிருந்தார்.
இந்நிலையில், இயக்குனரும் திமுக விசுவாசியமான கரு.பழனியப்பன் ஊடகம் ஒன்றில் பேசும்போது ‘கூட்டத்தில் எவன் எக்கேடு கெட்டு போனாலும் எனக்கென்ன.. நான் வந்து பேசிட்டு போயிடுவேன்.. 41 பேருக்கு வெளிவராதவன் அவங்க கட்சி நாலு பேர புடிச்சதும் என்ன என்னவேனா செய்யுங்கன்னு சினிமா வசனம் பேசுகிறான்.
மன்னிப்பு கேட்கவே அவன் தயாராக இல்லை. இவன்லாம் ஒரு தலைவனா? தலைவனும் முட்டாளா இருக்கான்.. அவனோட தொண்டன் அடி முட்டாளா இருக்கான். இவ்ளோ பிரச்சனைக்கு நடுவுல standwithvijay-ன்னு போடுறான். முதலமைச்சர் அவ்ளோ பொறுமையா பேசுகிறார். நீ மறுபடியும் தூண்டி விடுற மாதிரி பேசுற.. அரசியலில் விஜய் மாதிரி ஒரு அயோக்கியன் கிடையாது’ என பொங்கி இருக்கிறார். இதையடுத்து கோபமடைந்த விஜய் ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.