சூர்யாவின் கருப்பசாமி திருவிளையாடல்!.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா!..

 
surya

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் தற்போது வசூல் சாதனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

‘கருப்பு’ திரைப்படம் அதிரடி, உணர்ச்சி மற்றும் சமூக கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக படத்தின் திரைக்கதை மற்றும் ஆர்ஜே பாலாஜியின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக திரையரங்கு வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

karuppu

சூர்யா சிங்கமாகவும் என்ஜிகே கெட்டப்பிலும் நடித்துள்ள கருப்பு திரைப்படத்திற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு திரண்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் வெறும் 10 நாட்களில் ரூ.130 கோடி வசூல் ஈட்டியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ போஸ்டருடன்  அறிவிப்பை சக்தி பிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும், “ஆர்ஜே பாலாஜி மற்றும் படக்குழுவினரின் பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் விருந்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் கவர்ந்துள்ள ‘கருப்பு’ திரைப்படம், தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் 289 கோடி ரூபாய் வசூலை கருப்பு ஈட்டியுள்ளது என்றும் விரைவில் 300 கோடிக்கும் அதிகமான வசூலை கருப்பு கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, த்ரிஷா, நட்டி நட்ராஜ், ஆர்ஜே பாலாஜி, ஷிவதா, சுவாசிகா என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யா கடவுள் கருப்பசாமியாகவே நடித்துள்ளது தான் ஹைலைட்.

Tags

From Around the web