சூர்யாவை கருப்பு கை விடல!.. முதல் நாள் வசூலே அடேங்கப்பா இத்தனை கோடியா!..

 
சூர்யாவை கருப்பு கை விடல!.. முதல் நாள் வசூலே அடேங்கப்பா இத்தனை கோடியா!..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆக்ஷன் மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கிறார். பக்தி மற்றும் ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா கருப்பசாமியாகவே வந்து ரசிகர்களை தியேட்டர்களில் சாமியாட வைத்துள்ளார். குறிப்பாக அவரது தீவிரமான நடிப்பு, மாஸ் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வசனங்கள் ரசிகர்களை மெய்சிலிர்க வைத்துள்ளது.

கருப்பு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்காமல் சப்போர்ட்டிவான ரோலில் முன்னணி நடிகை த்ரிஷா நடித்திருக்கும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி, நட்டி நடராஜ், தீபா, ஸ்வாசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தின் இசையை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உருவாக்கியுள்ளார். அனைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தியேட்டரில் பலர் சாமி வந்த ஆட முக்கிய காரணமே சாய் அபயங்கர் தான். கருப்பனே வாருமய்யா.. எங்க கூடவே ஆடுமய்யா பாடல் எல்லாம் தியேட்டர் பிளாஸ்ட் ஆகிறது.

பல தடைகளுக்கு இடையே “கருப்பு” திரைப்படத்தின் முதல் நாள் காட்சிகள் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுலாக ஓடியதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் முதல் நாளிலேயே ரூபாய் 20கோடி வரை உலகளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களிலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் உயரும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

From Around the web