மன்னித்து விடுங்கள்!.. ஆர்யா சீன் டெலிட் முதல் விஜய் புகழாரம் வரை.. கருப்பு எடிட்டர் சரண்டர்!

 
surya

சூர்யா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. படத்தின் கதை, ஆக்ஷன் காட்சிகள், அனிருத்தின் இசை மற்றும் சூர்யாவின் திரை ஆளுமை ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவலை படத்தொகுப்பாளர் கலைவாணன் பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய பேட்டியில் பேசிய கலைவாணன், ‘கருப்பு’ திரைப்படத்தில் பெரிய அளவிலான எந்த காட்சியும் நீக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொத்தமாகப் பார்த்தால் 20 முதல் 30 விநாடிகள் வரையிலான காட்சிகள் மட்டுமே படத்தின் ஃபைனல் காப்பியில் இருந்து அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் ஆர்யா நடித்திருந்த சிறப்பு தோற்றக் காட்சி, ‘டாக்டர்’ திரைப்படத்தில் வருவது போன்று இடம்பெற்ற இரட்டை சகோதரர்களின் மெட்ரோ தொடர்பான நகைச்சுவை குறிப்பு காட்சி மற்றும் ‘தி கோட்’ திரைப்படத்தை நினைவூட்டும் ஜீவா சம்பந்தப்பட்ட ஹெல்மட் சீன் உள்ளிட்ட சில தருணங்கள் மட்டுமே நீக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அவற்றில் நடிகர் ஆர்யாவின் கேமியோ காட்சிதான் நீக்கப்பட்ட காட்சிகளில் நீளமானதாக இருந்ததாகவும், அந்தக் காட்சியை ரசிகர்களுக்காக தனியாக Deleted Scene வடிவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்யாவின் காட்சியை பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படத்தொகுப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள இந்த தகவல், ‘கருப்பு’ திரைப்படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆர்யாவின் நீக்கப்பட்ட காட்சியை எப்போது வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும், விஜய் கருப்பு படத்தில் நடித்திருந்தால் இன்னமும் நல்லா இருந்திருக்கும் என அவர் பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Tags

From Around the web