தெய்வ பக்தியோடு தியேட்டரில் கருப்பு படம்.... வித்யாசமா இருக்கேப்பா!
கருப்பு திரைப்படம்:
நட்சத்திர நடிகர் சூர்யாவின் நடிப்பில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் தான் கருப்பு. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருக்கிறார் .
இந்த திரைப்படம் வெளியாகி இதுவரை ரூ. 130 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பட குழுவினருக்கு பெரும் லாபத்தை பெற்று கொடுத்திருக்கிறது. இதுவரை இந்த இந்த திரைப்படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் தியேட்டரிலேயே கருப்பசாமியின் அவதாரத்தை பார்த்து அவர்களுக்கு சாமி வந்து சுய நினைவின்றி ஆடுவதெல்லாம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

பூஜையுடன் கருப்பு:
அந்த வகையில் தற்போது சூர்யாவின் கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக தினமும் கருப்பசாமிக்கு பூஜை போட்டுவிட்டு படத்தை வெளியிடுவதாக தியேட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆம், இது குறித்து வரதராஜா சினிமாஸ் நிறுவனம் பதிவிட்டுள்ளதாவது, "ஒவ்வொரு காட்சி வெளியிடப்படுவதற்கு முன்பதாக இந்த மாதிரி எலுமிச்சை குங்குமம் விபூதியுடன் கருப்பசாமிக்கு பூஜை போட்டு படத்தை வெளியிடுகிறோம்.
கருப்பு ஒரு உணர்வு:

மேலும், கருப்பு என்பது வெறும் திரைப்படம் மட்டுமல்ல அது ஒரு உணர்வாகவும் ஒரு கொண்டாட்டமாகவும் சிலருக்கு தூய தெய்வீகத்தின் தலையீடாகவும் மாறி வருகிறது. என பதிவிட்டுள்ளனர். இந்த வித்தியாசமான மாற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
