200 கோடியை தாண்டிய வசூல்...உற்சாகத்தில் கருப்பு
இந்த ஆண்டின் முதல் 200 கோடியை தாண்டிய வசூல்...உற்சாகத்தில் கருப்பு
சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கருப்பு. திரிஷா, நட்டி, லப்பர் பந்து சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வந்த சூர்யா இப்படத்தை மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் அவரது எதிர்பர்ப்பு பொய்யாகவில்லை. டபுள் வெற்றியாக சூர்யாவிற்கு இப்படம் அமைந்தது. திரையிட்ட இடமெல்லாம் குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் வசூல் அதிஅக்ரித்து வருகிறது.
இந்த நிலையில் கருப்பு படக்குழு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுல்ளது. அதில் இதுவரை உலகளவில் ரூ 207 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். சூர்யா நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் கருப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் இதே நிலை தொடர்ந்தால் நிச்சயம் இப்படம் ரூ. 300 கோடி வசூல் உறுதி என பேசப்படுகிறது.
