Karuppu Box office: இன்னும் அடங்காத கருப்பு கலெக்சன்; 340 கோடியை தாண்டி சாதனை
13 ஆண்டுகள் தொடர் தோல்விக்கு பின் சூர்யா நடித்து கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்
Jun 12, 2026, 11:17 IST
13 ஆண்டுகள் தொடர் தோல்விக்கு பின் சூர்யா நடித்து கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன் உள்ளிட்ட பல்ர் நடித்துள்ளனர். தென் மாவட்டங்களில் பெரும்பாலோனாரால் வழிபடும் தெய்வமான கருப்பசாமியை மையமாக வைத்து ஒரு பரபரப்பான திரைகதையை அமைத்ததால் இப்படம் நினைத்து பார்க்க முடியாத வெற்றியை பெற்றது. சூர்யா சினிமா வாழ்க்கையில் கருப்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் கருப்பு படம் வெளியாகி 25 நாட்களை கடந்தும் நல்ல வசூலை கொடுத்துள்ளது. இதுவரை இப்படம் ரூ. 340 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் கருப்பு முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
