சூர்யாவின் படத்திற்கு திடீர் வரவேற்பு ஏன்? இதுவரை நடந்ததற்கு காரணம் இதுவா?

ஒவ்வொரு நடிகர்களுக்கும் இன்னொரு நடிகரின் படத்தினை தர குறைவாக விமர்சனம் செய்து வசூலை அடிவாங்க வைக்கும் என்ற பேச்சு இதுவரை சமூக வலைத்தளத்தில் இருந்தது.
 
karuppu

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்திற்கு எப்போதும் போல இல்லாமல் இந்த முறை அதிக வரவேற்பு கிடைத்து வருவதற்கு வேறு ஒரு காரணமும் இருப்பதாக சில தகவல்கள் கசிந்து வருகிறது. 

தமிழ் சினிமாவின் முப்பெரும் நடிகர்களாக இருந்தது விஜய், அஜித்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தான். ஆனால் அவருடைய நல்ல கதைகள் வெற்றி அடைந்தாலும் அதற்கு சரியான வசூல் இல்லாமல் ஓடிடியை தேர்வு செய்தது. 

பின்னர் தியேட்டரில் வெளியான படங்கள் எல்லாமே நெகட்டிவ் விமர்சனத்தை குவித்தது. அதிலும் பல கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட கங்குவா முதல் காட்சியின் பாதியிலேயே பல நெகட்டிவ் விமர்சனமும் குவித்தது. 

இதற்கு எதிராக அவர் மனைவி ஜோதிகா சமூக வலைத்தளத்தில் கணவரின் படத்திற்கு ஆதரவாக பொங்கினார். இதை தொடர்ந்து அவருக்கு எதிராகவும் அதிகமான கமெண்ட் இணையத்தில் பரவியது. இதையடுத்து சூர்யாவின் படமும் ஜோதிகாவின் படமும் விமர்சிக்கப்பட்டதே அதிகம். 

இந்நிலையில் இதற்கு எதிர்மாறாக கருப்பு படத்திற்கு அப்படியான எந்த எதிர்கருத்துகளும் வராமல் இருக்கிறது. இதனால் இதற்கு முன்னர் சூர்யாவின் படங்களுக்கு வெளிவந்த நெகட்டிவ் விமர்சனங்களும் திட்டமிட்ட எதிர்முகாமின் சதியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

From Around the web