கருப்பு படத்தின் கதையே இந்த சீரியலில் இருந்து ஆட்டைய போட்டது தானா? அடப்பாவமே!!!
Karuppu: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு படத்தின் மொத்த கதையையே ஒரு பிரபல சீரியலில் இருந்து தான் காப்பி அடித்து இருப்பதாக ரசிகர்கள் கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர்.
சூர்யாவின் நடிப்பில் பல ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய கோடி வசூல் செய்து இருக்கும் படம் என்றால் அது கருப்பு தான். அதிலும் சிங்கம் படத்தின் அதே புகழை இந்த படம் பெற்று இருப்பதே ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, நட்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் ரிலீஸுக்கு தயாராகினாலும் ட்ரீம்வாரியர் நிறுவனத்தின் கடன் சுமை காரணத்தால் அப்படத்தினை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதில் ஆதங்கப்பட்ட ஆர்.ஜே.பாலாஜி கண்ணீர் விட்டு அழுது ரீல்ஸ் போட்டு இருந்தார்.
பின்னர் பல பரபரப்புக்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் திருமுருகன் இயக்கத்தில் வெளியான மெட்டி ஒலி படத்தின் அரை நிமிட காட்சியின் காப்பி எனக் கூறப்படுகிறது.
ஒரு காட்சியில் செய்தியாளர் கதாபாத்திரத்தில் வரும் தேவதர்ஷினி அங்கு மீட்கப்பட்ட நகையை போலீசார் கொடுப்பதை பார்த்து ஆச்சரியப்படுவார். நீதிமன்றம் படியேறினால் இதெல்லாம் இவ்வளவு சீக்கிரம் நடக்காது எனவும் கூறுவார்.
அதனை தொடர்ந்து அங்கு இருப்பவர் கருப்பு சாமி இங்கு சும்மா விட மாட்டார். தண்டனையை உடனுக்குடன் கொடுத்து விடுவார் எனவும் சொல்லுவார். இந்த காட்சி அடிப்படையில் தான் கருப்பு படம் உருவாகி இருப்பதாக தற்போது ட்வீட்கள் பரந்து வருகிறது.
