கருப்பு படத்தின் உண்மையான பேய் இவர் தான் - சிலிர்க்க வைக்கும் சம்பவம்!

 
karuppu


கருப்பு திரைப்படம்: 

சூர்யாவின் நடிப்பில் கடந்த 15ம் தேதி திரையரங்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கருப்பு. இந்த திரைப்படம் வெளியாகி ரூ.300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி அமோக லாபத்தை பட குழுவிற்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது .

இந்த நிலையில் கருப்பு படத்தில் வரும் பேய் கதாபாத்திரத்தின் உண்மையான நபர் இவர்தான் எனக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் விழிபிதுங்க வைத்திருக்கிறது. ஆம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கருப்பு படத்தில் வரும் பேய் கதாபாத்திரத்தை எடுத்திருக்கிறார்கள் .

karuppu real charector

பேய் கதாபாத்திரம்: 

1976 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவரான பிஹாரி மிர்தக் என்ற விவசாயின் சொத்துக்களை அபகரிப்பதற்காக அவரது உறவினர்களே அவர் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் சமர்ப்பித்தனர்.

அதன் பின் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு தான் தான் உயிரோட இருப்பதாக மிர்தக்   நிரூபித்தார். இதன் பின்னர் தன்னைப்போல தவறாக இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மிர்தக் சங்க்  என்ற ஒரு அமைப்பை நிறுவி அவர்களுக்கு தொடர்ந்து உதவி வந்தார். இவர்தான் உண்மையான அந்த பேய் கதாபாத்திரம் இதை கேள்விப்பட்ட கருப்பு படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் உண்மையிலே சிலிர்த்துப் போய் விட்டார்கள்.

Tags

From Around the web