கருப்பு படம் பார்க்கப் போறீங்களா… மண்டை பத்திரம்! பொளக்கும் புளூசட்டைமாறன்!

 
கருப்பு படம் பார்க்கப் போறீங்களா… மண்டை பத்திரம்! பொளக்கும் புளூசட்டைமாறன்!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபரும், விமர்சகருமான புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

கேரளாவில் இருந்து இந்திரன்ஸ் தன்னோட மகனைக் கூட்டிட்டு சென்னைக்கு வர்றாரு. அவரு தன்னோட மகளுக்கு மேஜர் ஆபரேஷன் பண்ண வேண்டி இருக்கு. அதற்கு அவர் பணம் எல்லாம் கொண்டு வரல. அதுக்குப் பதிலா 60 பவுன் நகையைக் கொண்டு வந்துருக்காரு. அதை வித்துத்தான் இந்த ஆபரேஷனைப் பண்ணனும்.

ஆனா அவரு சென்னையில இறங்கின உடனே 2 திருடன்கள் நகையை அபேஸ் செய்து விட்டு ஓடிடுறானுங்க. போலீஸ்ல போய் புகார் கொடுக்க, அவங்களும் மீட்குறாங்க. ஆனா நகையை உடனே கொடுத்துட முடியாது. அதுக்கு நிறைய ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. ரிட்டர்ன் ஆஃப் பிராப்பர்டி போட்டு கோர்ட் மூலமா தான் வாங்க முடியும். அதுக்கு போலீஸ் ஒருத்தர் அட்வகேட் ஆர்.ஜே.பாலாஜியை அறிமுகப்படுத்துறாரு.

அவரோ அந்த கோர்ட்ல உள்ள ஜட்ஜ் வரை நல்ல பழக்கமானவர். அவர் வர்ற கிளையன்ஸை எல்லாம் ஏமாற்றி பணத்தைப் புடுங்குறாரு. அப்படித்தான் இந்த இந்திரன்ஸ் நிலைமையும் ஆகுது. அப்போ கோர்ட் வளாகத்துல உள்ள கருப்பு சாமியிடம் முறையிடுகிறார். கருப்பு சாமியா சூர்யா வந்து இறங்குறாரு. அவரு வக்கீலா மாறி ஆர்.ஜே.பாலாஜிக்கு எதிரா வாதாடுறாரு. அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை.

இந்தப் படத்துல 2 இன்ட்ரஸ்ட் விஷயம். ஒண்ணு கோர்ட் டிராமா, இன்னொன்னு சாமி படம். முதல் பாதி ஓரளவு நல்லாருந்தது. ஆர்.ஜே.பாலாஜி, சூர்யாவிடம் நீ கடவுளா இருந்து எதுவும் செய்றது பெரிய விஷயம் கிடையாது. மனுஷனா இருந்து இங்கு சர்வே பண்றது தான் பெரிய விஷயம். அப்படி இருந்து எங்கிட்ட மோதி பாருன்னு சவால் விடுறாரு. அது நல்ல விஷயம். இரண்டாம் பாதியில ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரி ஒரே கேஸ், ஒரே ஜட்ஜ் அப்படிங்கற மாதிரிதான் கதை போகுது.

இந்த கேஸ் எல்லாம் கூட சுவாரசியம் இல்லை. மனுஷனை கடவுள் ஜெயிக்கறதுல என்ன சுவாரசியம் இருக்கு? கதை எதை நோக்கிப் போகுதுன்ன தெரியல. அது இஷ்டத்துக்கு கட்டுக்கடங்காமல் போய்க்கிட்டு இருக்கு. சிங்கம் சூர்யாலாம் வர்றாரு. கிளைமாக்ஸ்ல சூர்யா கார்த்தி மாதிரி இருக்காரு. எதுவுமே இன்ட்ரஸ்டா இல்லை. இந்தப் படத்துல கருப்பு சாமி கார் ரேஸ்ல போய்க்கிட்டு இருப்பாரு.

இதுக்கு மேல வேகமா போகாதே. இதுக்கு மேல என் பவர் வேலை செய்யாது. வேற எல்லைன்னு சொல்றது நல்லாருந்தது. செகண்ட் ஆஃப் ஒண்ணுக்கும் உதவாத திரைக்கதை. இந்த உலகத்துலயே மிகச்சிறந்த பொய் கடவுள். அந்த ஹாட்டான விஷயத்தை வச்சித்தான் இந்தப் படத்தை எடுத்துருக்காங்க. கடவுளை வச்சி எப்படி காசாக்கலாம்னு பிளான் பண்றவன் எல்லாம் உலகம் முழுக்க பெரிய பிசினஸ்மேனா இருக்குறான்.

உலகம் முழுக்க இதுதான் நடக்குது. கடவுள் தான் நம்மைக் காப்பாத்துவாரு. ஆனா இந்தியாவுலதான் கடவுளையே காப்பாத்துற கட்சியை வச்சி நாட்டையே பிடிச்சிக்கிட்டு இருக்குறான். கடவுள் இருக்குன்னு நம்புறவங்களுக்கு இந்தப் படம் ஓகே. கடவுள் இல்லைன்னு சொல்றவனுக்கு மண்டை பத்திரம் என்கிறார் புளூசட்டை மாறன்.

From Around the web