கருப்பு சும்மா சரவெடி!.. பைசா வசூல்!.. 6 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்!...

சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்திருக்கிறது.
 
suriya

சிங்கம் 2-வுக்கு பின் தியேட்டரில் வெளியான சூர்யா படம் எதுவும் சூப்பர் ஹிட் அடிக்க வில்லை. இடையில் ஜெய் பீம், சூரரைப் போற்றப்படங்கள் பேசப்பட்டாலும் அந்த படங்கள் ஓடிடியில் மட்டுமே வெளியானது. எனவே ஒரு நல்ல தியேட்டர் வெற்றிக்காக காத்திருந்தார் சூர்யா.

அப்படி ஒரு படமாக அவருக்கு கருப்பு அமைந்துவிட்டது. ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த திரைப்படம் பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டாலும் பல காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஒருவழியாக கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்தார்கள். ஆனால் அன்றும் படத்தை வெளியிட முடியவில்லை. பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு 15ம் தேதி காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் இந்த படம் வெளியானது..

கடவுள் செண்டிமெண்ட், ஆன்மீகம், ஆக்சன், காமெடி, மசாலா எல்லாம் கலந்து உருவான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதால் குடும்பமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கிறார்கள். இதனையடுத்து கருப்பு படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 நாட்களில் இந்த திரைப்படம் 147 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் கருப்பு திரைப்படம் 175 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Tags

From Around the web