'சூர்யா 48'-க்கு பூஜை போட்டாச்சு... இதுக்கும் நம்ம 'கருப்பு' இசையமைப்பாளர் தானாம்!
Jun 29, 2026, 13:05 IST
தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் சூர்யா. இவர் அடுத்தடுத்து படங்களுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து பயணித்து வருகிறார்.
சமீபத்தில், இவரது 'கருப்பு' ரிலீஸ் ஆகி பெரிய வெற்றி பெற்றது. ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி அடுத்த படமான 'விஸ்வநாத் & சன்ஸ்'-ஐ ரிலீஸ் செய்யவிருக்கிறார்.
ஜித்து மாதவன் இயக்கத்தில் தயாராகும் 'சூர்யா 47' படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிற தருவாயில் இருக்கிறதாம். இந்நிலையில், இன்று (ஜூன் 29-ஆம் தேதி) தனது 48-வது படத்துக்கு பூஜையை போட்டிருக்கிறார் சூர்யா.
இதை 'ஜெய் பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவிருக்கிறார். இதற்கு 'கருப்பு' படத்துக்கு இசையமைத்த சாய் அபயங்கர் தான் இசையாம்.
