அடுத்த வாரம் எல்லாம் இல்லை!.. அதிரடியா இந்த வாரமே ஓடிடியில் சாமியாட்டம் ஆடப்போகும் கருப்பு!..
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘கருப்பு’ திரைப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியிடப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படம், ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக சூர்யாவின் மாஸ் நடிப்பும், கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்திருந்த மெனக்கெடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, சாய் அபயங்கரின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்திய ‘கருப்பு’, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக கூறப்படுகிறது.
திரையரங்குகளில் படத்தை தவறவிட்ட ரசிகர்கள், தற்போது ஓடிடி வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். குறிப்பாக குடும்ப பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் சமீபத்திய வெற்றிப் படங்களில் ஒன்றாக கருதப்படும் ‘கருப்பு’, ஓடிடி தளத்திலும் புதிய சாதனைகளை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜூன் 12 முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அமேசான் பிரைம் வீடியோ அறிவித்து விட்டது. 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கருப்பு தயாரிப்பு நிறுவனம் அவசரப்படுவது ஏன் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால், பெரிய தொகைக்கு ஓடிடி உரிமம் பெறப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களில் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
