340 கோடி வசூலை கொடுத்த சூப்பர் டைரக்டர் பர்த்டே!.. கருப்பு டீம் ஆர்ஜே பாலாஜிக்கு வாழ்த்து!
நடிகர் மற்றும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கருப்பு பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தற்போது அட்டகாசமான வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆர்.ஜே. பாலாஜிக்குப் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. காரணம், சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அந்த வெற்றியின் மகிழ்ச்சியுடன் வரும் இந்த பிறந்தநாள், அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Wishing our blockbuster director @RJ_Balaji, a blasting birthday ❤️
— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 20, 2026
With Love, from the entire team of #Karuppu 🔥 pic.twitter.com/OiX1VBUdCv
வானொலி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஆர்.ஜே. பாலாஜி, தனது நகைச்சுவை கலந்த பேச்சுகளின் மூலம் விரைவில் பிரபலமானார். பின்னர் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான அவர், குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். நானும் ரௌடிதான், தேவி, எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் நடிகராக தனது திறமையை நிரூபித்துள்ளார்.
நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றி கண்டுள்ள ஆர்.ஜே. பாலாஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கி பாராட்டுகளைப் பெற்றார்.
மேலும், சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படத்தின் வெற்றி, அவரது நடிப்பு வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
திரையுலகில் தொகுப்பாளர், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ள ஆர்.ஜே. பாலாஜி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #HappyBirthdayRJBalaji என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
