Jananayagan: ஜனநாயகன் வியாபாரத்துக்கு வேட்டு வெச்ச விஜய்!.. ரிலீஸ் தள்ளிப் போகுமா?!...
Vijay: கரூரில் நடந்த சோகமான சம்பவம் விஜயின் அரசியல் வாழ்க்கை மட்டுமில்லாமல் சினிமா வாழ்க்கையும் புரட்டி போட்டிருக்கும். நல்லவேளையாக ஜனநாயகன் அவரின் கடைசிப்படமாக மாறிவிட்டது. விஜய் சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறி விட்டார். ஜனநாயகன்தான் அவரின் கடைசி படம். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
ஒருபக்கம், விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க அங்கே மக்கள் கூடிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் வரை உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அது விஜயின் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளியாகவே அமைந்துவிட்டது. திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் விஜயை பிடிக்காதவர்களும் ‘இதற்கு விஜய் மட்டுமே முழு பொறுப்பேற்க வேண்டும்’ என அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அதோடு இதுவரை விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காததும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கிட்டத்தட்ட விஜயும், தவெக நிர்வாகிகளும் தலைமறைவாக இருப்பது போன்ற ஒரு தோற்றமும் உருவாகி இருக்கிறது. அதற்கு காரணம் விஜய் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பதால்தான்.
ஜனநாயகன் திரைப்படத்தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியிடுகிறார்கள். ஆனால் தற்போது இருக்கும் சூழலில் ஜனவரி மாதம் இந்த படம் வெளியாகுமா என்பது தெரியவில்லை. அதேபோல் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான வகையில் மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் விஜய் அதில் கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை. எனவே அது தள்ளிப் போகுமா?, இல்லை விஜய் இல்லாமல் நடக்குமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பதும் தெரியவில்லை.
அதேபோல், ஜனநாயகன் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் எனவும் சிலர் சொல்கிறார்கள். ஒருபக்கம் இப்படத்தின் ஓடிடி வியாபாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 121 கோடிக்கு விலை பேசியிருந்தது. தற்போது அதைவிட குறைவான விலையில் அமேசானுக்கு 109 கோடிக்கு விற்பனை செய்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
அதோடு ஜனநாயகன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை இதுவரை யாரும் வாங்கவில்லை இப்படி கரூர் சம்பவம் விஜயின் அரசியல் வாழ்க்கையையும், ஜனநாயகன் பட வியாபாரத்தையும் பாதித்திருக்கிறது.
